சரத் சந்திரன் :


கடந்த 2017 ஆம் ஆண்டு  லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் அங்கமாலி டைரீஸ் . இந்த படத்தில் நடித்ததன் மூலம்  புகழடைந்தவர் நடிகர் சரத் சந்திரன் . மலையாள நடிகரான இவர் முதன் முதலில் அனீசியா என்னும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் அங்கமாலி டைரீஸ் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு   'கூடே', 'ஒரு மெக்சிகன் அபரதா'  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.






இறந்த நிலையில் மீட்பு :



கடந்த வெள்ளிக்கிழமை சரத் சந்திரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 37 வயதாகும் சரத் கொச்சியை பூர்வீகமாக கொண்டவர் . இவரது தந்தை  சந்திரன் தயார் லீலா. இவருக்கு ஷியாம் என்ற சகோதரனும் உள்ளார்.  சரத் சந்திரன், முன்பு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்ததோடு, டப்பிங் கலைஞராகவும் ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளார். வளர்ந்து வரும் சிறந்த நடிகர்கள் பட்டியலில் இருந்த சரத் சந்திரனின் அகால மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற இருப்பதாக மலையாள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



 


‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் சரத் சந்திரனுடன் நடித்த ஆண்டனி வர்கீஸ் பெப்பே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் , ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தில் நடித்த  சரத் சந்திரனின் புகைப்படத்தைப் பகிர்ந்து “RIP பிரதர்” என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகுதான் இந்த சம்பவம் குறித்து பலருக்கும் தெரிய வந்தது.