ஆங்கிலோ இந்தியன் வம்சாவளியான ஆண்ட்ரியா, பாடகியாக, நடிகையாக, டப்பிங் ஆர்டிஸ்டாக தமிழ் உள்ளிட்ட பிர தென்மாநில மொழிகளில் வலம் வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில் அவர் பாடிய , ‛உம் சொல்லிறியா மாமா...’  பாடல் பட்டி தொட்டியெல்லாம் கலக்கி எடுத்தது. 


தொடர்ந்து பல ஆல்பங்களை அவர் தந்து கொண்டிருந்த போதும், நடிப்பிலும் பயங்கர பிஸியாக இருக்கிறார் ஆண்ட்ரியா. இந்நிலையில் அவர் நடித்து, மிஸ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான ப்ரமோஷன் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. 


இந்நிலையில் பிரபல இசை அப்ளிகேஷன் நிறுவனமன ஸ்பாட்டிஃபை, ஆண்ட்ரியாவின் சிறந்த பாடல்களை தொகுத்து EQUAL India என்ற பெயரில் ப்ளே லிஸ்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்திய பெண்களுக்காக பிரத்யேக ப்ளே லிஸ்ட் என அறிவித்துள்ள ஸ்பார்ட்டிஃபை, அதற்கான ப்ரமோஷனையும் தொடங்கியுள்ளது. 






நியூயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பில்டிங்கில் ஆண்ட்ரியாவின் போட்டோவுடன் கூடிய ப்ரமோஷனை வெளியிட்டுள்ளது ஸ்பாட்டிஃபை. அதில் அழகிய ஆண்ட்ரியா பரபரப்பான நியூயார்க் நகரின் பார்வையில் விழுகிறார். 


இந்த ப்ளே லிஸ்டில் 38 பாடல்களை அடக்கியுள்ளது ஸ்பாட்டிஃபை. இதில் ஆண்ட்ரியா பாடியது மட்டுமல்லாமல், அவரது விருப்ப பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இந்திய பாடகியின் விளம்பரம், நியூயார்க் நகரில் பிரபல கட்டடத்தில் இடம்பெற்றிருப்பதை அங்குள்ள இந்தியர்கள் பெருமையுடன் பார்த்துச் செல்கின்றனர். 






இந்நிலையில் தனது புகைப்படம் நியூயார்க் நகரின் பாரம்பரிய நகரில் இடம் பெற்றிருப்பதை ‛தான் ஒரு ராணி போல உணர்வதாக’ ஆண்ட்ரியா பதிவில் தெரிவித்துள்ளார்.