கொரோனா சூழலில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக , திரைத்துறையை சேர்ந்த பலரும் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களுக்கு படையெடுத்துள்ளனர். குக்கிங் வீடியோ செய்வது, ஹோம் டூர் செய்வது, ஃபிரிட்ஜ் டூர் செய்வது, பாத்ரூம் டூர் செய்வது என படு ஆக்டிவாக இருக்கின்றனர். இன்னும் சிலர் பொழுதுபோக்கிற்காக லைவ் மூலமாகவும், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாகவும் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



அப்படித்தான் திவ்ய தர்ஷினி தனது ரசிகர்களுடன் இண்ஸ்டாகிராமில் உரையாடினார் . கடந்த 20 ஆண்டுகாலமாக, பிரபல சின்னத்திறையில் தொகுப்பாளராக இருந்து வரும் இவரை ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரம் டிடி என அழைப்பதுதான் வழக்கம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடியிடம் பலரும் தங்கள் கேள்விகளை முன்வைக்க அதற்கு அவர் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் "நீங்கள் இரண்டாவது காதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்ப, அதற்கு பதிலளித்த டிடி "இரண்டாவது காதல் என்பதில் தப்பில்லை, ஒரே நேரத்தில் இரண்டு காதல்தான் தப்பு" என பதிலளித்திருந்தார்.


டிடி தனது நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு நெருக்கமான நணபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக அண்மையில் ஒரு செய்தி உலா வந்தது. அது தொடர்பாக டிடி எந்த  விளக்கத்தையும் கொடுக்காத நிலையில், இரண்டாவது காதலில் தப்பில்லை என்ற அவரின் கருத்து.  மறுமணத்தை உறுதி செய்வதாக உள்ளது என ரசிகர்கள் பேச தொடங்கியுள்ளனர். மேலும் மன அழுத்தம் குறித்து  கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் "அதற்குள் சென்று விடாதீர்கள், அதிலிருந்து மீண்டு வருவது அத்தனை எளிமையல்ல , நான் அதனை அனுபவித்துள்ளேன் " என தெரிவித்தார். முன்னதாக டிடி தீவிர மன அழுத்ததில் இருந்ததற்கு அவரின் திருமண முறிவுதான் காரணம் என சொல்லப்பட்டது. இது குறித்து மறைமுகமாக நிறைய மேடைகளில் பகிர்ந்திருந்தார்.






சமீபத்தில் தனியார்   நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கிய டிடி "உங்களுக்கு ஒரு பொருள் தேவை இல்லை என்றால் அதனை மறுபடி எடுக்காதீர்கள், அதனை அப்படியே விட்டுச்செல்வதுதான் நல்லது என உணர்ச்சிப்பட பேசியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது குறித்து  பதில் அளித்த டிடி அந்த கருத்தினை தான் தன்னை அறியாமல் கூறியதாகவும், எடிட் செய்யும் பொழுது நீக்கிவிடுவார்கள் என்றிருந்தேன். ஆனால் அது வைரலாக மாறும் என நினைக்கவில்லை” என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது


டிடி தொகுப்பாளராக அறியப்பட்டாலும்  அவர் அறிமுகமானதோ தொலைக்காட்சி தொடர்களில்தான். தற்போது அவர் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.