திரையுலகில் ஜெயிப்பது என்பது நினைக்கும் அளவிற்கு எளிதான ஒரு விஷயம் அல்ல. ஏராளமான சோதனைகள், சறுக்கல்கள் அனைத்தையும் கடந்து தான் ஒருவர் முன்னுக்கு வருகிறார். அப்படி இருக்கையில் பிரபலங்களான பின்னர் அவமானங்கள், விமர்சனங்களை சந்திப்பது என்பது சகஜமான ஒன்று.
சோசியல் மீடியாவின் வளர்ச்சிக்கு பிறகு பிரபலங்களை ட்ரோல் செய்வது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாகி விட்டது. அவர்கள் என்ன செய்தாலும் அது ட்ரெண்டிங் ஆகிறது. இப்படி எந்த அளவிற்கு சோசியல் மீடியாவால் நன்மைகள் இருக்கிறதோ அதற்கும் மேலாக தீங்கான விஷயங்களும் உள்ளன.
பிரபலங்கள் பதிவிடும் போஸ்டுக்கு கமெண்ட் என்ற பெயரில் சில எல்லையை மீறுகிறார்கள். அந்த வகையில் புஷ்பா மற்றும் ரங்கஸ்தலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுசுயா பரத்வாஜ். காதலர் தினத்தை முன்னிட்டு பலரும் போஸ்ட் செய்து வந்த நிலையில் அனுசுயா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். "உங்களோடு வாழ்ந்த வாழ்க்கை ஒரு வினோதமான ரோலர் கோஸ்டர் ரைட் போல இருந்து" என்ற கேப்ஷனை பதிவிட்டு இருந்தார்.
அனுசுயாவின் இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் " பணத்திற்காக தான் அனுசுயா பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார்" என ஒருவர் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து கடுப்பான நடிகை அனுசுயா அவருக்கு கடுமையாக ரிப்ளை செய்தது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
"பணத்தை தாண்டி சிந்திக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவரிடம் மட்டும் தான் பணம் உள்ளதா? ஏன் என்னிடம் பணம் இல்லையா? இனிமேல் இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன் என பகிரங்கமாக எச்சரித்து அனுப்பிய ரிப்ளையை பார்த்து அந்த நபர் நீங்கள் என்ன தான் சொன்னாலும் அது தான் உண்மை என்றுள்ளார்.
மேலும் கடுப்பாகிய அனுசுயா மஞ்சள் காமாலை வந்த ஒருவனுக்கு இந்த உலகமே மஞ்சளாக தான் தெரியும். உன்னுடைய சிந்தனை புத்தி அனைத்தும் பணத்தின் மீது இருந்தால் மற்றவர்களும் அப்படி தான் இருப்பார்கள் என யோசிக்காதே, உன்னை திருத்திக்கொள்" என பதிலளித்துள்ளார் அனுசுயா பரத்வாஜ். இவர்களின் இடையில் நடைபெற்ற இந்த மோதல் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
பிரபலங்கள் விமர்சிக்கப்படுவதும் அதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பதும் தற்போது இணையத்தில் அன்றாடம் நடக்கும் விஷயமானது.