பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்த மருத்துவமனைக்கு மீண்டும் சென்று , அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.
புற்றுநோயிலிருந்து மீண்ட சோனாலி :
நடிகை சோனாலி பிந்த்ரே 2018 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் தான் சிகிச்சை எடுத்த அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனைக்கு மீண்டும் சென்ற அவர் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து புகைப்படம் ஒன்றை க்ளிக்கினார். அதனை தனது Instagram பக்கத்தில் பகிர்ந்த சோனாலி அதே இடத்திற்கு மீண்டும் சென்றது எவ்வளவு 'உண்மையற்றது' என்றவர் , வீடியோவின் கேப்ஷனால தனது எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டார். "இந்த நாற்காலி, இந்தப் பார்வை, இதே இடம்... 4 ஆண்டுகளுக்குப் பிறகு. முழுமையான பயத்திலிருந்து தொடர்ந்த நம்பிக்கை வரை, பல மாறிவிட்டது, சில இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "அங்கே உட்கார்ந்து நோயாளிகள் உள்ளே செல்வதைப் பார்ப்பது உண்மையற்றது, நான் இதேபோன்ற பயணத்தில் இருந்ததைக் காண முடிந்தது... கீமோதெரபி தொகுப்பைப் பார்த்தேன், அதே காத்திருப்பு அறை, முகங்கள் வித்தியாசமாக இருந்தன... நம்பிக்கை இருக்கிறது என்று நோயாளிகளுக்குச் சொல்ல நினைத்தேன். , " என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.