கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுல் தனது டூடுல் மூலமாக, சந்தோஷ் நாராயணன் இசையில், தீ மற்றும் அறிவு பாடிய பொஹீமியன்-ஃபோக் பாடலான "என்ஜாய் எஞ்சாமி" பாடலை கொண்டது, அதன் வெற்றியைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற படமான அசுரன், மரக்கர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திற்கு தனது பாராட்டுக்களை டூடுல் மூலம் தெரிவித்துள்ளது அமுல் நிறுவனம்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a >#Amul</a> Topical: Proud National Award winners from Tamil Nadu and Kerala! <a >pic.twitter.com/Vb1haahwfK</a></p>— Amul.coop (@Amul_Coop) <a >March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
67-ஆம் தேசிய விருது சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் அசுரன் திரைப்படத்துக்காக தனுஷ், இசை அமைப்பாளர் இமான் மற்றும் துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . அதே போன்று மலையாளத்தில் வெளியாக இருக்கும் மரக்கர் அரபிக்கடலின்டே சிம்ஹம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டிச்சென்றுள்ளது ,100 கோடி மதிப்பிலான படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார் மோகன்லால் ,மஞ்சுவாரியர் மற்றும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் .
அமுல் நிறுவனம் பல வைரல் செய்திகளை தங்களில் டூடுல் மூலம் மக்களுக்கு செய்தியை கொண்டு சென்று உள்ளது . இது இரண்டாவது முறை சவுத் இந்தியன் சினிமாவிற்கு இது போன்ற பாராட்டுகளை தங்களின் டூடுல் மூலம் தெரிவித்து உள்ளது .