கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. கோலாகல ஏற்பாடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய விருந்து எனத் தடபுடலாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.
மகாபலிபுரம்
நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலியை எடுத்துக் கொடுத்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார். அஜித் தன் குடும்பத்துடன் வந்திருந்தார்.
திருப்பதி
திருப்பதியில் திருமணம் செய்ய நினைத்து முடியாமல் போனதால், நேற்று திருமணம் ஆகி இன்று திருப்பதி மலைக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி இதுவரை யாரும் செய்யாத வகையில் முதன்முதலாக ஏழுமலையான் கோவில் முன் போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.
காலணி சர்ச்சை
காலணிகளுடன் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதியான ஏழுமலையான் கோவில் முன்பகுதியில் நயன்தாரா காலணியுடன் சென்று போஸ்ட் வெட்டிங் ஷூட்டில் கலந்துகொண்டார் என தகவல் பரப்படுகிறது. ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணிகளுடன் நடமாட யாருக்கும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்கு முன்பாக, தரிசனத்துக்காக திருப்பதி கோவிலில் சென்று இறங்கிய நயன்தாராவை ரசிகர்கள் சூழாதிருக்க போலீசார் கவர் செய்து நடந்தனர். அந்த நேரத்தில் அருகில் நின்ற ஒரு வயதான அம்மா நயன்தாராவை அழைக்க, அதனை கவனித்த நயன்தாரா சட்டென திரும்பி பார்த்தார். பரபரப்பாக இருந்த நயன்தாரா முகம் அவரை பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்தது. அந்த அம்மா அவர்களை ஆசீர்வதித்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருமணத்தில் மிஸ் ஆனவர்கள்
முதல்வர் பசுமைக்கூடையுடன் வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இதற்கிடையே நயன்தாரா திருமணத்திற்கு விஜய் வராதது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே சமயம் மலையாள நடிகரான திலீப் வந்தது ரசிகர்களை கோபம் அடையச் செய்தது. நடிகை பாலியல் வழக்கில் சிக்கிய அவர் எதற்காக கல்யாணத்திற்கு வந்தார் என்று நயன்தாரா ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்