தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை அமிர்தா ஐயர், பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து லிஃப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் ஜோடியாக  சிறப்பாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். அமிர்தா தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 


 




முக்கோண காதல் படத்தில் அமிர்தா ஐயர் :


தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் 'காஃபி வித் காதல்' திரைப்படம் வெளியாக உள்ளது. முக்கோண காதல் கதை திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் அம்ரிதா ஐயர். இப்படத்தில் ஜீவா,ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் வெளியீட்டால் சற்று ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 4 வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது.    


 






 


2 மில்லியன் ஃபாலோவர்களை குவித்த அமிர்தா :
  
நடிகர் அம்ரிதா ஐயர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். அவவ்போது பல விதமான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி அளிப்பார். ஹாட்டான புகைப்படங்களும் அதில் அடங்கும். அமிர்தா எந்த போஸ்ட் போட்டாலும் அதற்கு லைக்ஸ்கள் சும்மா தாறுமாறாக குவியும். அமிர்தாவின் இன்ஸ்டகிராம் ஃபாலோவர் எண்ணிக்கையும் எகிறி கொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது 2 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற சந்தோஷத்தில் ஒரு குஷியான இன்ஸ்டா போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் அமிர்தா ஐயர். இந்த போஸ்டிற்கு தற்போது வாழ்த்துக்களும், லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் அமிர்தா.