பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பால் அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு சென்றது. அதன் படி அண்மையில் பிக்பாஸ் சீசன் 5 -ன் நிகழ்ச்சியும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அதில் பிக்பாஸ் சீசன் 5- ல் ராஜூ ஜெயமோகனும், அட்ல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாவும் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


 






பிக்பாஸ் சீசன் 5 பொருத்தவரை போட்டியாளர்களாக உள்ளே இருந்த அமீரும் பாவனியும் காதலித்ததாக சொல்லப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் பேட்டிகளில் ஒன்றாகவே வலம் வந்தனர்.  


 






இந்த நிலையில் இவர்கள் அடுத்ததாக விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் 2  நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது இவர்களுடன் சேர்ந்து போட்டியாளர்களாக , ஐக்கி பெர்ரி - தேவ், வேல்முருகன் - இசைவாணி, அபிஷேக் - ஸ்ருதி,  சுஜா - அவரது கணவர் சிவகுமார், ஆர்த்தி அவரது கணவர் கணேஷ், தாமரை அவரது கணவர் பார்த்தசாரதி மற்றும் டேனி ஆகியோர் இணைகின்றார்கள் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ராஜூ ஜெயமோகனும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்த பிரியங்காவும் தொகுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அனிதா - ஷாருக் ஜோடி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது