ப்ரைமின் புதிய ஒப்பந்தம் :


அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் ஒடிடி தளமான ப்ரைம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது சில சலுகைகளை வழங்க திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில் வரும் நாட்கள் ப்ரைம் வீடியோவில் வாடிக்கையாளர்கள் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் பிரைம் நிறுவனம் பிரபல  HBO மேக்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது. 






சலுகைகள் :


புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருக்கும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள்  HBO மேக்ஸ்ஸின் 11 ஒரிஜினல் வெப் தொடர்கள் மற்று 10 படங்களை இலவசமாக பார்க்க முடியும்.இதில் The Flight Attendant, Peacemaker, An American Pickle மற்றும் Aquaman: Kind of Atlantis ஆகியவை அடங்கும்.இதற்காக வார்னர் பிரதர்ஸ் இன்கார்பரேட்டட், டிஸ்கவரியுடன் அமேசான் ப்ரைம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் இனி அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் டார்க் காமெடி த்ரில்லர் 'தி ஃப்ளைட் அட்டெண்டன்ட்', கேலி குவோகோ நடித்த அனைத்து வகைகளிலும் தொடர்கள், டிசி சூப்பர் ஹீரோ தொடரான 'பீஸ்மேக்கர்', ஜான் சேனா நடித்த தொடர், 'செக்ஸ் அண்ட் தி சிட்டி'யின் புதிய அத்தியாயம், 'புதிய காசிப் கேர்ள்', 'அசல் பாப் கலாச்சார கிளாசிக் தொடர்',  உள்ளிட்ட பல தொடர்கள் திரைப்படங்கள் , உலகத்தரம் வாய்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு  ரசிக்கலாம்.






 


இதுகுறித்து அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் உள்ளடக்க உரிம இயக்குனர் மனிஷ் மெங்கானி கூறியதாவது :


 ”பிரத்தியேகமான HBO மேக்ஸ் வழங்கும் லேட்டஸ்ட் வெரைட்டியை பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் . பிரைம் வீடியோ மூலமாக  எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம் . மேலும் பிளாக்பஸ்டர் அமேசான் ஒரிஜினல்ஸ் முதல் சமீபத்திய யுஎஸ் டிவி நிகழ்ச்சிகளின்  பிரீமியர் வரை பிரீமியம் சர்வதேச உள்ளடக்கத்தை மற்ற வெளிநாட்டு மொழிகளில் அவர்களுக்கு வழங்குவதில் நம்பமுடியாத சில வசதிகளை உருவாக்கியுள்ளோம். ” என தெரிவித்துள்ளார்.