நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் பட ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் “அமரன்” என்ற படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.