ராஜ்குமார் பெரியசாமி


விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநராக பணியாற்றி பின் கெளதம் கார்த்தி நடித்த ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மூலம் பரவலான கவனம் ஈர்த்துள்ளார். அமரன் படத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக கடின உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டிருக்கிறார். அமரன் படத்தின் பிரம்மாண்டமான வெற்றி அவருக்கு திரையுலகில் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அமரன் படத்தைத் தொடர்ந்து  அடுத்தபடியாக அவர் தனுஷ் படத்தை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த தகவலை ராஜ்குமார் பெரியசாமி இந்த தகவலை கிட்டதட்ட உறுதிபடுத்தியுள்ளார்.


தனுஷ் படத்தை இயக்கப்போகும் ராஜ்குமார் பெரியசாமி


அமரன் படத்தின் ரிலீஸூக்கு பின் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டி ஒன்றில் அவர் இப்படி கூறியுள்ளார் ' ரொம்ப நாளாக ஒரு படத்திற்கான விவாதம் நடந்து வருகிறது. அனேகமாக அதுதான் என்னுடைய அடுத்த படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு நடிகர் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். பவர்ஃபுல் என்று நான் சொல்வது நடிப்பு ரீதியாக ரொம்ப சிறப்பாக நடிக்க கூடிய ஒரு நடிகரை. இதுவும் அமரன் படத்தைப் போலவே ஒரு சர்வைவல் தீம் தான். கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறேன்." 






ஃபவர்ஃபுல் நடிகர் என்று ராஜ்குமார் பெரியசாமி குறிப்பிட்டுள்ளது நடிகர் தனுஷ் தான் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.


தனுஷ்


தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகிறார். இது தவிர்த்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா படமும் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜூனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்