பஹல்காம் தாக்குதல்


ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய திரை பிரபலங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்கல் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Continues below advertisement


விஜய் நடித்த லியோ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ஆகிய இரு படங்களும் பஹல்காமில் எடுக்கப்பட்டவை. இந்த தாக்குதல் குறித்து அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தின் போது தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்


அழகான ஊர் பஹல்காம்


'அப்பாவி மனிதர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த மனிதத்தின் மீதும் அமைதியின் மீதும் விழுந்திருக்கும் பெரிய அடி. ஆண்டு தோறும் சுமார் 2 கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் பஹல்காம். அமரன் படத்தின் படப்பிடிப்பின் போது அங்கு அற்புதமான அனுபவங்கள் கிடைத்தன. அங்கு இருக்கும் வாழும் மக்கள் சுற்றுலா பயணிகளிடம் ரொம்ப கனிவாக நடந்துக் கொண்டார்கள். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ' என ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






லியொ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " லியோ திரைப்படம் முழுக்க முழுக்க பஹல்காமில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த சின்ன ஊரைப் நான் இப்படியான ஒரு நினைவை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. " என மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.