தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்த படத்தின் இசை வெளியீடு விழா நேற்று நடைபெற்றது.
வெல்கம் டூ பிக் லீக்:
இதில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "தீபாவளி பண்டிகைக்காக ஒரு கெட் டூ கெதர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். கதவைத் திறந்தால் அங்கு தல அஜித் சார் இருந்தார்.
சார் என்னிடம் கை கொடுத்து வெல்கம் டூ பிக் லீக் என்றார். நான் அவரையே பார்த்து வெல்கம் டூ பிக் லீக் என்றார். நான் புரியாமல் அவரையே பார்த்தேன். உங்களுடைய வளர்ச்சியை பார்த்து பலர் பயப்படுகிறார்கள் என்றால் நீங்கள் பிக் லீக்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெல்கம் என்றார்.
எனக்கு ஒன்னுமே புரியவில்லை. அவர் சீனியராக இருக்கிறார். அவர் என்னைக் கூப்பிட்டு சிவா அப்படி பண்ணனும், இப்படி பண்ணனும்னு சொல்லிட்டு போகலாம். அப்போது நான் புரிந்து கொண்டது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அதில் உள்ள அர்த்தத்தை நாம் பார்க்கனும் என்று புரிந்து கொண்டேன். ஆனால், நம்மளே காலினு ஒரு விமர்சனம் வந்தால் அதை நம்பாத என்று புரிந்து கொண்டேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகார்த்திகேயனின் அமரன்:
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் தீபாவளி விருந்தாக வருகிறது. தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் இந்த படம் மறைந்த ராணுவ வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைவாணன் எடிட்டிங் செய்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. அவருக்கும் தனுஷிற்கும் இடையே பெரும் மோதல் இருப்பதாக தொடர்ந்து கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகிறது. சிவகார்த்திகேயன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தான் யாரையும் வளர்த்துவிட்டேன் என்று கூறவிரும்பில்லை என்றும் தன்மேல் மீது அப்படி ஒரு முத்திரை குத்தப்பட்டது என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.