Amala Paul's husband Jagat Desai: நடிகை அமலாபால் தனது காதலரான ஜகத் தேசாயை இன்று திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவை பூர்விகமாகக் கொண்டவரான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமலா பால், தொடர்ந்து கோலிவுட்டில் வெற்றிநாயகியாக வலம் வரத் தொடங்கினார்.
நடிகர் விஜய்யுடன் தலைவா, நடிகர் விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி என பல ஹிட் படங்களில் நடித்த அமலா பால், டோலிவுட் சினிமாவிலும் கால் பதித்தார். தெய்வத் திருமகள் திரைப்படத்தில் பணியாற்றும்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் அமலா பாலும் காதலித்தனர். சில மாதங்களிலேயே திருமணம் செய்து கொண்ட இருவரும், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு அமலாபால் நடித்த ஆடை படம் சர்ச்சையானது. தொடர்ந்து திரைப்படங்கள் சுற்றுலா செல்வது, பார்ட்டிக்கு செல்வது என பிசியாக இருந்த அமலா பால் தனது பயணங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் அமலா பால், ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலா பாலின் கணவரான ஜகத் தேசாய் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். அமலா பால் நடிகையாக இருக்கும் நிலையில் ஜெகத் தேசாய் முற்றிலும் மாறுபட்டவர். சினிமா துறையை சேராத இவர், சுற்றுலா மற்றும் மருத்துவம் துறையை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், கோவாவில் இருக்கும் லக்சி ஹோம்சே ப்ராபர்ட்டி நிறுவனத்தில் தலைமை விற்பனை அதிகாரியாக உள்ளார். அமலா பால் சுற்றுலா செல்லும் போது ஜகத் தேசாயை சந்தித்துள்ளார். அதன்பின்னர் நட்பாக பழகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
கோவாவில் செட்டிலாகி உள்ள ஜெகத் தேசாய், கடந்த வாரம் அமலாபாலுக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்தினார். ஒருவார இடைவெளியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ஆளுங்கட்சியை சீண்டும் கமல்? பிக்பாஸ் மேடையில் அனல் பறந்த அரசியல் பேச்சு.. இன்றைய ஷோவில் பரபர!