ஆடை படத்தில் நிர்வாணமாக தான் நடித்தது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள நடிகை அமலா பால்  படக்குழுவின் மீதான நம்பிக்கையே அப்படத்தை சாத்தியமாக்கியது என்று தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலா பால். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் விஜய், தனுஷ், விக்ரம்,அதர்வா, சித்தார்த், ஜெயம் ரவி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர் 2019ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் நிர்வாணமாக நடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து பின் விவாகரத்து செய்த அமலா பால், மீண்டுமொரு திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டார். அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். 

Continues below advertisement

இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் பேசிய அமலா பால், “ஆடையின்றி நடித்த அந்த அனுபவத்திற்கு நன்றியுள்ளவராக இருந்தாலும் இன்று அதே போன்ற ஒரு முடிவை எடுக்க மாட்டேன்” என கூறினார். மேலும்  2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் பல காட்சிகளில் நான் நிர்வாணமாக தோன்ற வேண்டியிருந்தது. அதனால் அப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கமாக இருந்தது. 

ரத்னா குமார் எழுதி இயக்கிய அந்த படம் சொல்ல வந்த விஷயத்தை எப்படி மக்களிடம் கடத்தும், நிர்வாணக் காட்சிகள் என்றவுடன் அது முதன்மை விஷயமாக கருதப்படாமல் கதையின் ஒரு பகுதியாகக் கையாளப்படுமா என்ற கவலை எனக்கு இருந்தது. இதன் காரணமாக நான் இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் நம்ப வேண்டியிருந்தது. இவர்கள் உணர்வுப்பூர்வமாக இயங்கும் ஒரு அழகியல் சார்ந்த திரைப்படத்தை உருவாக்கத் தயாராக இருக்கிறார்களா அல்லது இது நிர்வாணத்தைப் பற்றியதா என்பதே எனது முழு சிந்தனையாக இருந்தது. 

எனவே இயக்குநர் கதை சொன்னபோது உடனே நான் ஓகே சொல்லவில்லை. அவர்கள் என்ன மாதிரியான அணுகுமுறையோடு வந்தார்கள் என்பதை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆனது. எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு படைப்பாற்றலுடன் படமாக்கப்படும் உறுதியாக நம்பிய பிறகே நடிக்க ஒப்புக் கொண்டேன். ஷூட்டிங்கில் குறைவான நபர்களுடன் அவர்கள் என்னை சௌகரியமாக உணர வைத்தார்கள். ஒருவேளை நான் இந்த கேரக்டரில் நடித்தால் மீண்டும் அதே போன்று கேரக்டராக வருமோ என்ற கவலையையும் எனக்கு ஏற்பட்டது.  நான் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை, மேலும் அதுபோன்ற படங்களில் நடிக்கவும் விரும்பவில்லை. 

நாம் இப்போது 2026  இருந்தாலும் நமது சமூகம் இன்னும் பெண்களின் உடல்கள் மீதான தனது மோகத்திலிருந்து விடுபடவில்லை. அவர்கள் அணியும் ஆடைகள் முதல் குழந்தைகள் பெறுவது வரஒ பெண்கள் தொடர்பான எல்லாவற்றிலும்  ஆணாதிக்க சமூகம்  தனது கேட்கப்படாத கருத்தைத் திணிப்பதில் பிடிவாதமாக இருக்கிறது” என அமலா பால் தெரிவித்துள்ளார்.