நடிகை அமலா பால் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் அவர் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.
ஹிட் படங்கள்
இருந்த போதிலும் அதே ஆண்டு வெளியான மைனா திரைப்படம் மூலம் தான் அமலா பால் பிரபலமானார். இதனையடுத்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால். விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார்.
அமலா பால் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆகி விட்டது. அதனைத் தொடர்ந்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி சோஷியல் மீடியாவிலும் அமலா பால் ஆக்டிவாக இருந்து வந்தார். விவாகரத்திற்கு பின்னும், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார்.
காதல், திருமணம்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, தனது பிறந்தநாளில் அவர் தன் காதலரை அறிமுகப்படுத்தினார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து இருவரும் மிக விரைவாகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கேரளாவில் மிக எளிமையாக நடைபெற்றது. அதன் பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அமலா பால் புகைபடத்துடன் அறிவித்திருந்தார். இது இவரது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
நீச்சல் குள வீடியோ
இந்நிலையில் நடிகை அமலாபால் தனது காதல் கணவர் தேசாயுடன் இணைந்து சுற்றுலா சென்றுள்ளார். கர்ப்பகாலத்தில் ஒருவர் சுற்றுலா செல்வதை பேபி மூன் என்பார்கள். பேபி மூன் சென்றுள்ள நடிகை அமலா பால் தனது கணவர் தேசாயிடன் இணைந்து நீச்சல் குளத்தில் ரிலாக்ஸ் செய்வதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், அமலா பாலின் கணவர் தேசாய், அமலா பாலை தூக்கிக் கொண்டு சுற்றும் நிலையில் காதல் ததும்ப வெளியாகியுள்ள இந்த வீடியோ அமலா பால் ரசிகர்கள் மத்தியில் இதயங்களை அள்ளி வருகிறது.
இருவரும் இப்படியே யார் கண்களும் படாமல் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.