புஷ்பா படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்த நடிகர் அல்லு அர்ஜூன், விஜே அஞ்சனாவின் அலம்பலால் மேடையிலிருந்து கோபமாக இறங்கிச் சென்றதாக செய்தி வெளியானது.


இந்நிலையில் இது குறித்து விளக்கியுள்ளார் விஜே அஞ்சனா ரங்கன்.


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட்.




இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக அல்லு அர்ஜூன் சென்னைவ் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை விஜே அஞ்சனா ரங்கன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் அல்லு அர்ஜூன் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க முற்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அஞ்சனா, அல்லு அர்ஜூனை புஷ்பா படப் பாடலுக்கு சிறு நடனமாடுமாறு வேண்டினார். ஆனால் நேரமின்மையால் அல்லு அர்ஜூன் அஞ்சனாவின் கைகளின் லேசாக தட்டிவிட்டு கீழே இறங்கிச் சென்றார். 
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள், அல்லு அர்ஜூன் அஞ்சனாவின் மீது படு கோபமடைந்தார். அவரால் தான் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார் எனப் பதிவிட்டனர்.






இந்நிலையில், அஞ்சனா ரங்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "அன்றைய தினம் நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிட்ட நேரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. நாங்கள் அவரை ஒரு பாடலுக்கு ஆடுமாறு வேண்டினோம். ஆனால் அவர் மிகவும் பணிவாகவே முடியாது என்பதை கூறிச் சென்றார். நிராகரிப்பு புன்னகையுடனேயே சொன்னார். அந்த சம்பவம் மிகவும் இயல்பானது. அதை வேறு மாதிரி திரித்துவிட்டார்கள். இப்போது இந்த ட்வீட்டை செய்தியாக்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.