ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புஷ்பா பாகத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த அப்டேட்டின் படி புஷ்பா 2 படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையானது நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லு அர்ஜூனின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஊ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. அதே போல அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றது. பேன் இந்தியா திரைப்படம், பிரமாண்ட கதையம்சம், ஊ சொல்றியா பாடல் என பல எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா வெளியானது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவுக்கு படம் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையே படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தொடங்கியது படக்குழு. முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால், இரண்டாம் பாகத்தை வேற லெவலில் எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது. முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடித்த வள்ளி கதாபாத்திரம் முடிவுக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தத் தகவலை தயாரிப்பாளர் மறுத்தார். இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.