புஷ்பா 2
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. 2024 ஆம் ஆண்டு தமிழ் , இந்தி , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியான படங்களின் சாதனைகளைக் கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது புஷ்பா 2. இதுதவிர அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் மெக பட்ஜெட் படங்களுக்கும் நிறைய சவால்களையும் படம் ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளில் 293 கோடி , அதிவேக 500 கோடி , அதிவேக 1000 கோடி என படம் பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது வரை புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ 1500 கோடிக்கும் மேல் வசூலித்து 2000 கோடியை நோக்கி நகர்ந்து வருகிறது.
அல்லு அர்ஜூன் கைது
ஒருபக்கம் புஷ்பா 2 படத்தின் அசுர வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் இன்னொரு பக்கம் அவர்களுக்கு அல்லு அர்ஜூனின் கதை வருத்தத்தை ஏற்படுத்தியது . புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவரது 9 வயது மகன் மூளைச்சாவடைந்தார். முன்னெச்சரிக்கை இல்லாமல் அல்லு அர்ஜூம் திரையரங்கத்திற்கு வந்தது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தெலங்கானா போலீஸ் அவரை கைது செய்தது. இதற்கு ரசிகர்கள் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும் சிறுவன் சாய் தேஜின் மருத்துவ சிகிச்சைக்கான பொருட்செலவுகளையும் ஏற்றுள்ளார்.
புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ்
திரையரங்கில் வசூல் வேட்டை நடத்தி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது புஷ்பா 2 திரைப்படம் திரையரங்கில் 56 நாட்கள் கடந்தப் பின்னரே படம் ஓடிடியில் வெளியாகும் அதற்குள்ளாக படம் பார்க்காத ரசிகர்கள் திரையரங்கில் சென்று படத்தை பார்த்துவிடும்படி படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.