ஃபகத் ஃபாசில் 


மலையாள சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசில்  இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ்  ,மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஃபகத் ஃபாசிலும் நடிப்பிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது . குறிப்பாக சமீபத்தில் வெளியான ஆவேஷம் படம் இந்தி ரசிகர்களிடமும் ஃபகத் ஃபாசிலை கொண்டு சேர்த்துள்ளது.


ஃபகத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் சிறப்பு போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. முன்னதாக ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் இருந்து அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது லைகா நிறுவனம்






இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஃப்கத் ஃபாசில் நடிக்கும் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது . மொட்டைத்தலை கையில் கோடரி மற்றும் துப்பாகி ஏந்தியபடி ஃபகத் ஃபாசில் நிற்கும் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது