’காந்தாரா’ படத்தின் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டியை தனக்கு ஒரு படம் செய்துமாறு அல்லு அரவிந்த் கேட்டு இருக்கிறார். 

Continues below advertisement

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தமிழில் வெளியான காந்தாரா திரைப்படம் இங்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. 

 

Continues below advertisement

ரிஷப் ஷெட்டி அவரே எழுதி இயக்கி இப்படத்தில் இரட்டை வேடத்திலும்  நடித்துள்ளார். அவரின் அபாரமான நடிப்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும் நேரடியாகவும் சென்று வாழ்த்தி வருகிறார்கள். படத்தில் ரிஷப் என்ட்ரியே திரையரங்குகளை தெறிக்கவிட்டது.  கூஸ் பம்ப்ஸ் காட்சிகளால் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் நிகழ்ச்சி ஒன்றில், ரிஷப் ஷெட்டியை  தன்னுடைய கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக உடனடியாக ஒரு படம் செய்து தருமாறு கேட்டதாகவும், அந்த ஆஃபரை ரிஷப் ஷெட்டி உடனடியாக ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் பேசியுள்ளார். 

அதே நிகழ்ச்சியில் பேசிய ரிஷப் ஷெட்டி, “ எனக்கு காந்தாரா படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டமில்லை. அடுத்தப்படத்திற்கான வேலைகளை தொடங்குவதற்கு முன்னர் ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ள இருக்கிறேன்” என்று பேசினார். 

வெறும் 19 கோடியில் உருவான காந்தாரா திரைப்படம், உலகம் முழுக்க 19 நாட்களில் 175 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் வெளியான ஆறு நாட்களில்  கன்னட தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்ந்து 30 கோடி வசூல் செய்திருக்கிறது. தொடர்ந்து  திரையரங்குகளில் வெற்றிகரமாக ‘காந்தாரா’ திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதால்  விரைவில் திரைப்படம்  250 கோடியை எட்டும் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.