தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான புஷ்பா படம் இந்தியா முழுவதும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. 

645 கோடி ரூபாய் வசூல்:


படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பிருந்தே, இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. படம் ரிலீஸ் ஆனது முதல் தெலுங்கிற்கு நிகராக மற்ற மொழிகளிலும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, வட இந்தியாவில் புஷ்பா 2 படத்திற்கு ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து வருகின்றனர்.


இந்த நிலையில், இதுவைர இல்லாத அளவிற்கு இந்தி அல்லாத மொழி படமாக வசூல் மழையில் நனைந்து வருகிறது புஷ்பா 2. கடந்த 16 நாட்களில் மட்டும் புஷ்பா 2ம் பாகம் 645 கோடி ரூபாய் வசூல் குவித்து அசத்தியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி முவீ மேக்கர்ஸ் நிறுவனம் இந்த தகவலை எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளனர். 


2000 கோடி

2000 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ள புஷ்பா படத்தின் பெரும்பாலான கலெக்ஷன் வட இந்தியாவில் இருந்தே வந்துள்ளது. இந்தியில் தற்போது வரை வேறு எந்த முக்கிய நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகாத நிலையில், புஷ்பா படம் தொடர்ந்து வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. மைத்ரி முவீ மேக்கர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இயக்குனர் சுகுமாரின் தயாரிப்பு நிறுவனமும் இந்த படத்தை  தயாரித்துள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படஜெட் சுமார் 500 கோடி ஆகும். 






சுகுமார் - அல்லு அர்ஜுன் மோதல், படம் பார்க்க வந்த பெண் ரசிகை உயிரிழப்பு எந்த விதத்திலும் வசூலை  பாதிக்கவில்லை.  முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். சுனில், ஜெகபதி பாபு என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 


புஷ்பா 2ம் பாகம், 3ம் பாகத்திற்கான அறிவிப்புடன் முடிந்துள்ளதால் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு உள்ளது. 2024ம் ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூலை குவித்த படமாக புஷ்பா 2ம் பாகம் திகழ்கிறது.


இந்த படம் தந்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டால் அல்லு அர்ஜுன் இந்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் புஷ்பா 2ம் பாகத்தின் வசூல் தொடர்ந்து நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .