அனிமல்


ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் அனிமல். அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பாலிவுட்  நடிகர்கள் அனில்  கபூர் , பாபி டியோல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். வருகின்ற டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கும் அனிமல் படத்தின் ட்ரெய்லர் நேற்று நவமபர் 24 ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியானது


அனிமல் ட்ரெய்லர்


தந்தை மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் அனிமல் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரன்பீர் கபூரின் நடிப்பிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. பர்ஃபி, ஏ ஜவானி ஹேய் தீவானி, ராக்ஸ்டார், தமாஷா போன்ற சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரன்பீர் கபூரை நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஒரு புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருந்து வரும் நிலையில், அனிமல் படத்தில் அவரது லுக் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. 


தன்னுடைய தந்தையால் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தப்படும் ஒரு மகன் தன்னுடைய அப்பவின் அன்பைப் பெறுவதற்காக எந்த எல்லைவரை செல்வான் என்பதே இந்தப் படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. தீவிரமான ஒரு உணர்ச்சியை அடிப்படையாக வைத்து அதனை ஆக்‌ஷன் நிறந்த கேங்ஸ்டர் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ரன்பீர் கபூருக்கு இடையிலான காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த ட்ரெய்லர் ரசிகர்களுக்கு இடையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


ட்ரெய்லரை பாராட்டிய ஆலியா பட்






பலர் இந்த ட்ரெய்லரை பாராட்டி வரும் நிலையில் தற்போது நடிகர் ரன்பீர் கபூரின் மனைவியான ஆலியா பட் இந்த ட்ரெய்லரை புகழ்ந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இதுவரை தான் இந்த ட்ரெய்லரை  7000 முறை பார்த்துவிட்டதாகவும் தன்னுடைய உற்சாகத்தில் வெளிப்படுத்த வார்த்தைகள் அற்றி இருப்பதாக  அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தை இந்த நொடியேதான் பார்த்தாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆலியா பட் அவர்களின் இந்த பதிவு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கிறது


அதிக புகழ்பெற்ற இந்திய பிரபலம்


சமீபத்தில் ஐ. எம் .டி பி தளம் வெளியிட்ட அதிக புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஆலியா பட் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.