பாகுபலி எனும் பிரம்மாண்ட படைப்பிற்கு படத்திற்கு ராஜமெளலி இயக்கும் படம் என்பதாலும், ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் இருந்ததாலும் ஆர்.ஆர். ஆர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நாளில் இருந்தே இருந்தது. இது தவிர படத்தின் ப்ரோமோஷனும் பிரம்மாண்டாக நடந்ததால், அனைத்து மொழி ரசிகர்களும் ஆர்.ஆர்.ஆர் படத்தை காண ஆவலாக காத்திருந்தனர். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் கடந்த 25 ஆம் தேதி வெளியானது ஆர்.ஆர்.ஆர். 


 






படத்தில் ராஜமெளலின் முத்திரை அழுத்தமாக பதிந்திருந்தாலும், கதாநாயகர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்பேஸ், நடிகை ஆலியா பட்டிற்கு கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம், சுவாரஸ்சியம் குறைந்த சீன்கள் உள்ளிட்டவை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, ராம்சரணின் காதலியாக வரும் ஆலியா பட்டிற்கு மிக குறைவான சீன்களே ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கான கதாபாத்திரத்திற்கும் பெரிதளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் பேசு பொருளாகி உள்ளன. 


இந்த நிலையில் இது குறித்து நடிகை ஆலியா பட் கோபமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆலியாபட் தனது இன்ஸ்டாகிராமில் ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பாக பதிவிட்ட பெரும்பாலான புகைப்படங்களை நீக்கி இருக்கிறார். மேலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜமெளலியை அன்ஃபாலோ செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை. அவர் இன்னும் ராஜமெளலியை பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.


 






படம் தொடர்பான விழாக்களில் பங்கேற்காமல் இருப்பதே கெளரவம் என கதாநாயகிகள் நினைத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில், கொரோனா 3 வது அலைக்கு முன்னர் ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பாக நடைபெற்ற பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் ஆலியா பட் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.