Welcome To The Jungle: காட்டுக்குள்ளே இசைக் கச்சேரி... நட்சத்திரப் பட்டாளம்.. லைக்ஸ் அள்ளும் அக்‌ஷய் குமார் பட டீசர்!

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர்கள் அனைவரும் இணைந்து நடித்துள்ள அக்‌ஷய் குமாரின் இந்தப் படத்தின் டீசர் வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘வெல்கம் டு த ஜங்கள்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர்கள் அனைவரும் இணைந்து நடித்துள்ள இந்த வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

அக்‌ஷய் குமார்

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் அக்‌ஷய் குமார் நேற்று தனது 56ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பாலிவுட்டில் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்களில்  நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக நடிகர் அக்‌ஷய் குமார் இருந்து வருகிறார். அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயங்களில் அவரது பெயர் எடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் நடிகராக இருந்து வருகிறார். நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு பாலிவுட் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்த நிலையில் தனது அடுத்தப் படமான வெல்கம் டு த ஜங்கள் ( welcome to the jungle) படத்தின் ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டார் அக்‌ஷய் குமார்.

வெல்கம் டு த ஜங்கள் ( welcome to the jungle)

நானா படேகர் மற்றும் அனில் கபூர் இணைந்து நடித்து வெளியான வெல்கம் படத்தின் மூன்றாவது பாகமாக உருவாகி இருக்கிறது வெல்கம் டு த ஜங்கள் ( welcome to the jungle). அக்‌ஷய் குமார், சுனீல் ஷெட்டி, லாரா தத்தா, சஞ்சய் தத், ஜாக்லின் ஃபெர்னாண்டஸ், திஷா படானி, பரேஷ் ராவல், அர்ஷத் வார்ஸி என இன்னும் பல கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு படத்தில் இத்தனை நடிகர்கள் சேர்ந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லலாம். அகமத் கான் இந்தப் படத்தை இயக்க ஃபிரோஸ் நடியாட்வாலா மற்றும் ஜோதி தேஷபாண்டே இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். ஜி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தின் நகைச்சுவையான முன்னோட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் பகிர்ந்துள்ளார்.

டீசர் எப்படி

ஒரே ஃப்ரேமில் அத்தனை நடிகர்களும் ராணுவ உடையணிந்து தோன்ற, வரிசையாக அனைவரும் இணைந்து பாடத் தொடங்குகிறார்கள். இதில்  அனைவருக்கும் இடையில் சண்டை ஏற்பட அவர்களை சமாதானப்படுத்துகிறார் அக்‌ஷய் குமார்.

காட்டுக்குள் செல்லும் ஒரு மிகப்பெரிய ராணுவப் படையும் அவர்களுக்கு இடையில் நடக்கும் சுவாரஸ்யமான  நகைச்சுவையான பயணத்தையும் சொல்லும் வகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.


 

Continues below advertisement