அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில், இந்தப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் நிலவி வந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியிருக்கிறார்.


அவர் பேசும் போது, “ இது குறித்து விக்னேஷ் சிவனிடம் அப்படி ஏதும் வைத்திருக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு விக்னேஷ் என்னுடைய ஹீரோவை நான் அப்படி பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதனால் அவர் என்னை வில்லனாக நடிக்க வைக்க மாட்டார். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று கூறினார். 


தகவல் உதவி


 



நடிகர் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தத்திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.






இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக  ‘போடா போடி’ படம் மூலம் திரையுலத்திற்கு அறிமுகமான விக்னேஷ் தொடர்ந்து விஜய் சேதுபதியின்  ‘நானும் ரெளடிதான்’,  ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இது தவிர பல படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவர் அடுத்ததாக அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.