AK 61 21 days schedule at Bangkok : முழுமையாக படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் திரும்புவோம்...AK 61 படக்குழுவினர் உறுதி 


தமிழ் சினிமாவின் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்குமார் படங்கள் வெளியாகும் நாள் ஒரு திருவிழா போல வரவேற்கப்படும். தற்போது இயக்குனர் ஹெச். வினோத்தின் இயக்கத்தில் போனி கபூர் ஸ்டுடியோ பார்ட்னரான ஜீ உடன் இணைந்து உருவாகிவரும் பெயரிடப்படாத AK 61 திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். 


 



வங்கி கொள்ளை பின்னணி :


தற்காலிகமாக AK 61 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. 2022 இன் பிற்பகுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் என கூறப்படுகிறது. ஒரு வங்கி கொள்ளையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. படப்பிடிப்பின் கடைசி ஷெட்யூலை செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 


மீண்டும் பாங்காக் பயணம் :


இயக்குனர் எச்.வினோத் மற்றும் படக்குழுவினர் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பாங்காக் சென்று மீதி இருக்கும் படப்பிடிப்பினை மிகவும் தீவிரமாக முடித்துவிட்டு திரும்புவதற்கான பணிகளை  தொடங்கியுள்ளனர். 21 நாட்கள் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்த செப்டம்பர் 15ம் தேதி போல் ஒட்டுமொத்த குழுவுடன் பாங்காக் செல்ல உள்ளனர் என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


 






 


விரைவில் அப்டேட் :


AK 61 திரைப்படம் அக்டோபர் மாத தொடக்கத்தில் முழுவதுமாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பின்னர் படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபடுவர் என்றும் முழுமையாக படத்தின் பணிகள் முடிவடைந்தவுடன் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். முன்னர் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது ஆனால் அது தாமதமாகும் என்றும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 


அடுத்த படம் ஒப்பந்தம் :


படத்தின் முக்கியமான பகுதிகள் சென்னையிலும் ஹைதராபாத்திலும் படமாக்கப்பட்டது. படத்திற்காக வங்கியின் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் விரைவில் வெளியாகவுள்ளது என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவினரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.