தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ளது. இன்னும் ஒரு மாதமே குட் பேட் அக்லி படம் ரிலீசிற்கு உள்ள நிலையில், கடந்த மாதம் குட் பேட் அக்லி படத்தின் டீசர் ரிலீசாகியது. 


குட் பேட் அக்லி முதல் பாடல்:


இந்த டீசருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முதல் பாடல் விரைவில் மாமே.. சுடச்சுட ரெடி பண்ணிருக்கோம்.. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 






குட் பேட் அக்லி படத்தின் டீசரிலே ஜிவி பிரகாஷ் மிரட்டலாக இசையமைத்திருப்பார். அஜித்தின் கிரீடம் படத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்கள் இடைவெளியில் அவரது படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீவிர விஜய் ரசிகரான ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது படத்திற்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மாஸ்க்கு எல்லாம் மாஸா?


மாஸ்க்கு எல்லாம் மாஸ் என்ற ஒரு பாடல் படத்தில் இடம்பெற்றிருப்பதாக ஏற்கனவே ஜிவி பிரகாஷ் கூறியிருந்தார். இந்த நிலையில், விரைவில் வெளியாகும் குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் இந்த பாடலாக இருக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ரம்யா என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். கேங்ஸ்டராக நடித்துள்ள அஜித்துடன் பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர். 


மிகப்பெரிய எதிர்பார்ப்பு:


இந்த படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். அபிநந்தன் ராமனுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அஜித் நடிப்பில் இதற்கு முன்பு ரிலீசான விடாமுயற்சி படத்தில் ஆ்கஷன் காட்சிகள் பெரியளவு ஏதும் இல்லாமல் அஜித் மிக சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 


குட் பேட் அக்லி படத்தில் அஜித் தனது முந்தைய ப்ளாக்பஸ்டர் படங்களான தீனா, பில்லா, அமர்க்களம், வாலி, ரெட் போன்ற படங்களின் கெட்டப்-களில் தோன்றியும், வசனங்களை பேசியும் அசத்தியுள்ளார். இது படத்தின் மீது மேலும் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.