நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், முதல் நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமைத்திரைப்படம் 35ல் இருந்து 40 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல் வெளியானது. 


முதல் நாள் முடிவில், உலக அளவில் சேர்த்து பார்த்தால் வலிமைத்திரைப்படம் மொத்தம் 48-ல் இருந்து 50 கோடி ரூபாய் வசுலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நாள் முடிவில் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலாகி சாதனைப்படைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதில் 60% வசூல் தமிழ்நாட்டில் இருந்து வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அஜித் திரைப்படங்கள் குவித்த வசூல் வேட்டையில், 3 நாட்களில் 100 கோடி ரூபாயை அள்ளி இருக்கும் முதல் படம் ‘வலிமை’ என தெரிவிக்கப்பட்டது.



அதனை அடுத்து, இதுவரை எந்த தமிழ் சினிமாவும் செய்திடாத நான்கு நாள் வசூல் சாதனையை செய்திருக்கிறது ‘வலிமை’ திரைப்படம். கொரோனா முதல் அலை முடிவில் விஜய் நடிப்பில் மாஸ்டர், இரண்டாம் அலை முடிவில் அண்ணாத்த, டாக்டர், மாநாடு உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வசூல் இருந்திருந்தாலும், வலிமை தனி ரெக்கார்டு படைத்திருக்கிறது.


தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாள் வசூல் வேட்டையாக கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, அண்ணாத்த படத்திற்கு நான்கு நாள் வசூல் 75+ கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வாரங்கள் திரையரங்குகளில் ஓட இருக்கும் வலிமை, பல கோடிகளை வசூல் செய்யும் என தெரிகிறது.






வலிமை வசூல் ப்ரேக் அப்:


முதல் நாள்: 30 கோடி


இரண்டாம் நாள்: 12 கோடி


மூன்றாம் நாள்: 16 கோடி


நான்காம் நாள்: 22 கோடி


முதல் நான்கு நாள் வசூல், தமிழ்நாட்டில் மட்டும்: 80.64 கோடி 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண