நடிகர் அஜித் குமார் ஸ்காட்லாந்தில் கார் ஓட்டுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


அஜித்குமார் கார் ஓட்டும் வீடியோ:


ரக்‌ஷா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், கொட்டும் மழையிலும் டி-ஷர்ட் அணிந்தவாறு கார் ஒன்றை அஜித்குமார் கூல் ஆக டிரைவ் செய்து செல்கிறார். மற்றொரு வீடியோவில், பிரமாண்ட மலைகளுக்கு மத்தியில் வெள்ளை நிற சட்டை அணிந்தவாறு, காரை ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அந்த பெண், ஸ்காட்லாந்தின் சில காட்சிகள் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.






ஸ்காட்லாந்தில் அஜித்குமார் கிளிக்ஸ்


மற்றொரு பதிவில், சாலையோர இருக்கையில் அமர்ந்து இருப்பது, வீடு மற்றும் சாலையில் கேஷுவல் போஸ் மற்றும் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது போன்ற அஜித்குமாரின் புகைப்படங்களையும் அஜித்குமார் வெளியிட்டுள்ளார். மேலும், ”தனக்கு மிகவும் பிடித்த சில தருணங்களில் இவை எனவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் போன்ற வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட, அஜித்தின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.


AK 62:


அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம், வாரிசு உடனான போட்டிக்கு மத்தியிலும் பிரமாண்ட வெற்றி பெற்றது. வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு, வங்கிகள் செய்யும் ஏமாற்று வேலைகளை அந்த திரைப்படம் தோலுரித்து காட்டியது. எச்.வினோத் மற்றும் அஜித்குமார் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படம் இதுவாகும். மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதைதொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கு அஜித்குமார் தயாராகி வருகிறார்.


கழட்டி விடப்பட்ட விக்னேஷ் சிவன்:


அஜித்குமாரின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகவிற்கு, விக்னேஷ் சிவனிற்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அஜித்குமாரின் அடுத்த படத்தை, மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


இதனிடையே, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித்தின் புகைப்படங்கள், அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிறகு தான், அஜித்குமாரின் அடுத்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 62வது படத்தை முடித்த கையுடன், மோட்டர் சைக்கிளில் உலகை சுற்றி வரும் தனது பயணத்தை அஜித் தொடர உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.