குழந்தை நட்சத்திரமாகபல்வேறு மொழியில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஷாலினி. தமிழில் விஜயின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அலைப்பாயுதே , அமர்க்களம் போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமர்க்களம் படத்தின் போது அஜித் ஷாலிக்கு காதல் ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு ஆத்விக் , அனுஷ்கா என இரு குழந்தைகள் உள்ளனர். ருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பில் இருந்து விலகிக் குடும்பத்தில் கவனம் செலுத்தினார் ஷாலினி. குறைவான படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் இவரது தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் இருந்து வருகிறது.
சமீபத்தில் விருது வழங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாலினி தான் நடித்த ஒரு படத்தைக் கூட தனது குழந்தைகள் பார்த்ததில்லை என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏழுப்பியுள்ளது
குழந்தைகளிடம் கோரிக்கை வைத்த ஷாலினி
விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஷாலினி தனது குழந்தைகள் தன்னுடைய படங்களை பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ஷாலினி " இந்த தருணத்தில் நான் என் குழந்தைகளிடம் என் படங்களை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இதுவரை என்னுடைய படமும் பார்த்ததில்லை. ஒவ்வொரு முறையும் முயற்சி செய்யும்போது அப்படியே போயிடுச்சு. சமீபத்தில் என் மகள் அவளது தோழி என்னுடைய அலைபாயுதே படத்தைப் பற்றி பேசியதாக சொன்னாள். அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதைப் பற்றி என் மகன் என்னிடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். ஃபுல்பால் பிரபலங்கள் போல தனது அம்மா விருது கொடுக்க போவதாக அவன் தனது நண்பரிடம் சொன்னான். ஆனால் என் படங்களை பார்க்க சொன்னால் மட்டும் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளாம் என்று சொல்லிவிடுவார்கள். " ஷாலினி பகிர்ந்துகொண்டார்
