விடாமுயற்சி


மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.


விடாமுயற்சியால் தள்ளிப்போன படங்கள்


கடந்த ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின் பிப்ரவி 9 ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டது. இதனால் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த காதலிக்க நேரமில்லை , நேசிப்பாயா போன்ற  சிறிய பட்ஜெட் படங்கள் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகின. மேலும் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் ஆகிய இரு படங்கள் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸ் மாற்றிவைக்கப்பட்டன. தற்போது போட்டியே இல்லாமல் அஜித் படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


விடாமுயற்சி இரண்டாவது பாடல்


சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி பெரியளவில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த டிரைலரில் இடம்பெற்ற ராப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில்  தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான ' பத்திகிச்சு ' பாடல் வெளியாகியுள்ளது. விஷ்ணு எடவன் மற்றும் அமோக் பாலாஜி சேர்ந்து எழுதியுள்ளார்கள். அனிருத் மற்றும் யோகி சேது இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள்.