நேர்கொண்ட பார்வையில் இணைந்த அஜித், வினோத் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல மாற்றங்களை சந்தித்தது. அப்படி இப்படியாக படம் ஒரு வழியாக பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் அந்தத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது.


அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2: 58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது.  வெளிநாடுகளில் படம் சென்சார் ஆக சென்சார் செய்யப்பட்டு வருகிறது.






நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய எம்.ஆர். ராஜாகிருஷ்ணன் இந்தப்படத்திற்கும்  ஒலிப்பதிவு செய்கிறார். இவர் ரங்கஸ்தலம் படத்திற்கு தேசிய விருது வென்றவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. 


அவர்  BEHINDWOODS சேனலுக்கு அளித்த பேட்டியில், “ தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் தங்களது ஆடியோ சிஸ்டத்தை மேம்படுத்தியிருக்கின்றனர். ஆனால் சில இடங்களில் ஒலியின் வால்யூம் சரியான ஒலி தரத்துடன் பொருந்தவில்லை. வலிமை 11.1 ஒலி கலவையில் வந்திருக்கிறது. அதனால் வலிமை படத்தின் ஒலி தரத்திற்கு ஏற்றவாறு திரையரங்க ஒலி அமைப்பை மாற்றி வைக்க நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று பேசியிருக்கிறார். இது ஒரு புறமிருக்க, அடுத்ததாக வினோத், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் ஆக்‌ஷன் கம்மியாகவும், வசனங்கள் அதிகமாக இருக்கும் என்று இயக்குநர் வினோத் ஏற்கனவே அறிவித்திருந்தார்.