VidaaMuyarchi X Review: அஜித்தின் விடாமுயற்சி எப்படி இருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் குறித்து, எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட விமர்சனம் இதோ.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளிநாடுகளிலும், மற்ற சில நகரங்களிலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் தற்போது படம் பார்த்த ரசிகர்கள் இந்த படம் பற்றி தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளமான எக்ஸ் தள பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் விடாமுயற்சி ரசிகர்கள் மனதை கவர்ந்ததா? இல்லையா என்பதை அவர்கள் விமர்சனம் மூலம் தெரிந்து கொல்வோம்.
தமிழ் திரையுலகின் வசூல் மன்னனும், மல்டி டேலண்ட்டடு பர்சனுமான, நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இன்று ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று காலை ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழகத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், 9 மணிக்கு தான் படம் திரையரங்குகளில் வெளியாகியது.
Just In




ஆனால் வெளிநாடுகள் மற்றும் பிற மாவட்டங்களில் இன்று காலை 4 மற்றும் 5 மணிக்கே ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் திரையிட பட்டன. தற்போது இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின், விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனம் பற்றி இந்த படத்தில் பார்ப்போம்.