விடாமுயற்சி


மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித்  நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 


பொதுவாக அஜித் படங்கள் என்றாலே ரசிகர்கள் அப்டேட்களுக்காக காத்திருக்கும் நிலை இந்த படத்திற்கு தொடர்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கூட இதுவரை வெளியாகததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளார்கள். இதனிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கு குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. படம் தொடங்கிய சில நாட்களிலேயே ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் என அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் இயக்குநர் ஆதிக். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக இருப்பதாக எதிர்பார்க்கப்ப்படுகிறது. 


 


விடாமுயற்சி டீசர்






ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் விடாமுயற்சி படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன. தற்போது விடாமுயற்சி டீசர் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் படம் வெளியாகும் என இழந்த ரசிகர்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.