Good Bad Ugly: தமிழ் திரையுலகின் உச்சந்ட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரையரங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசியதாவது,
ஒரு மனிதனாகவே பாத்தாரு:
ஒரு ஹீரோவைப் பாத்து இன்ஸ்பயர் ஆகி, டைரக்டர் ஆகனும்னு ஆசைப்பட்டு இந்த இடத்துல வந்து இருக்கேன். ஒரு அஜித் சார் ரசிகனா இருந்தா என்ன நடக்கும்னு இன்னைக்கு நிரூபிச்சுருக்கேன். அதற்கு அஜித்திற்கு நன்றியுடன் இருப்பேன். அவர் என்னைச் சந்தித்தபோது நான் மிகப்பெரிய ஹி்ட் இல்லாத இயக்குனர். முதல் படம் மட்டும்தான் ஓடியிருந்தது.
அஜித் சாரைப் பொறுத்தவரை ஹிட், ஃப்ளாப் யாருகிட்டயும் பாத்தது இல்ல. ஒரு மனிதனாகத்தான் பாத்துருக்காரு. என்கிட்ட இருந்து எப்படி அதைப் பாத்தாருனு எனக்கு இப்பவரை ஆச்சரியமா இருக்கும். போனி கபூர் சார்கிட்ட அவன் பெரிய டைரக்டர் ஆவானு சொன்னீங்களே? எதை வச்சு சார் சொன்னீங்கனு கேட்டேன். சிரிச்சுகிட்டே போயிட்டாரு. அதுதான் அஜித் சார்.
ஐ லவ் யூ:
அஜித் எப்போதும் தன்னை ஒரு ஸ்டாராக நினைத்தது இல்ல. தன்னை ஒரு நடிகராகவே நினைத்துள்ளார். இந்த படம் இந்தளவு ஒரு ஆற்றலை கொண்டு வந்துள்ளது என்றால் அது அஜித்சாரின் ஆற்றல்தான். குட் பேட் அக்லி டைட்டிலை பரிந்துரைத்ததே அஜித்சார்.
அதுல இருந்து படப்பிடிப்பு முடிந்து ஓவர்நைட்டில் டப்பிங் முடிக்குற வரைக்கும் சார் அவரோட முழு அர்ப்பணிப்பை படத்திற்கு தந்திருந்தார். என் மனைவி ஐஸ்வர்யாவை காட்டிலும் உங்களுக்குத்தான் அதிக ஐ லவ் யூ சொல்லிருக்கேன். என் அப்பா, அம்மா, குடும்பத்திற்கு பிறகு நீங்கதான். மன்னிச்சுடு ஐஸ்வர்யா.
அமைதியானவனாக மாற்றியுள்ளது:
இந்த ஒரு வருஷம் என் வாழ்க்கையில ஒரு முக்கியமான வருஷமாக பார்க்கிறேன். இந்த ஒன்றரை வருஷம் என்னை மிகவும் அமைதியானவனாக மாற்றியுள்ளது. நான் ரொம்ப துறுதுறுவென்று இருக்கக்கூடிய நபர். நான் இந்த மாதிரி ஒரு தயாரிப்பாளரிடம் பணியாற்றியதே இல்லை. கேமராமேனோட பேசிக்க மாட்டேங்குறோம்னு சொல்லுவோம். முதல்நாள் ராத்திரியே நாங்க பேசிக்குவோம். ஜிவி பிரகாஷ் அவரோட பெஸ்டை தாண்டி கொடுக்கனும்னு கொடுத்துருக்காரு. நன்றி.
சம்பந்தம் இல்லை:
அர்ஜுன்தாஸ் நிறைய படங்கள் அவரு வில்லனாக பண்ணனும்னு கேட்டப்ப அவர் பண்ணல. இந்த படத்துல அவர் பண்ணது சாருக்காக. அவர் மீது வைத்துள்ள அன்பு மற்றும் மரியாதைக்காக நீங்க பண்ணீங்க. இந்த வெற்றிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வெற்றிக்கான முழு பங்கும் அஜித்திற்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்குமே ஆகும். இதில் நானும் ஒரு பங்கு.
அஜித் சாரிடம் ரிலீசிற்கு பிறகு பேசுனேன். அவர் வெற்றியை தலைக்கு ஏத்திக்காத. தோல்வியை மனசுல ஏத்திக்காத. வேலையை பாருங்கனு சொன்னாரு.
இவ்வாறு அவர் பேசினார்.
குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர். இந்த படத்தில் அர்ஜுன்தாஸ், சுனில், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, சிம்ரன், ஜாக்கி ஷெராஃப், ஷான் டைக்கோ ஆகியோர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது வரை இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.