Good Bad Ugly Collection: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் உலகெங்கும் நேற்று ரிலீசானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் அஜித் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது. 

முதல் நாள் வசூல்:

இந்த நிலையில், குட் பேட் அக்லி படம் வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் வியாழக்கிழமையான நேற்று ரூபாய் 30.9 கோடி வசூல் குவித்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் எத்தனை கோடி என்பது இதுவரை தெரியவில்லை.

முதல் நாளான நேற்று படத்திற்கு மிகவும் நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் இன்றும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், நாளை சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரசிகர்கள் மற்றும் குடும்பங்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

அதிகரிக்கும் வசூல்:

இதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி தற்போது கோடை விடுமுறை காரணமாக கல்லூரிகள், பள்ளி மாணவர்கள் விடுமுறையில் இருப்பதால் வரும் நாட்களில் மேலும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் கண்டிப்பாக அதிக வசூலைக் குவிக்கும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்தாக அமைந்திருப்பதால் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

கொண்டாடும் அஜித் ரசிகர்கள்:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜுன்தாஸ், சுனில், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் அசத்தியுள்ளார். முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.