கலைஞர் கருணாநிதியின் திரைப்பணி


1947 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்கிற படத்தில் தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கினார் கலைஞர் கருணாநிதி. 75 படங்களுக்கும் மேலாக திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இந்தப் படங்களில் சுயமரியாதை சார்ந்த திராவிட இயக்க கருத்துக்களை வசனங்கள் எழுதி மக்களிடம் மிகெப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தின் வசனங்கள் இன்றையத் தலைமுறை இயக்குநர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 


கலைஞர் நூற்றாண்டு


திரைத்துறை சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. கலைஞரின் திரை ஆளுமையைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கலாம் . வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சங்கள் ஒன்றிணைய இருக்கிறார்கள்.


மேலும் இந்தி மற்றும் தென் இந்திய திரைப் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் பல வருடங்கள் கழித்து இந்த நிகழ்சையில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.







அஜித் சர்ச்சை பேச்சு.


சினிமா தொடர்பான எந்த விதமான பொது நிகழசியிலும் கலந்துகொள்ளாத அஜித் குமாரை பல வருடங்களுக்குப் பிறகு பார்ப்பதற்கு ரசிகர்கள் ஒருபக்கம் ஆர்வமாக இருக்கும் நிலையில். அதே நேரத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு இதே போன்ற நிகழ்ச்சி ஒன்றில் அஜித் குமார் மேடையில் பேசியதும் அனைவரின் நினைவிற்கு வந்துபோகிறது.


கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்தது. அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அந்த சமயம் தமிழ் திரையுலகம் சார்பில் அவருக்கு, ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பேசிய அஜித், ‘ இதுபோன்ற விழாவுக்கு வற்புறுத்தி அழைக்கப்படுவதாகவும், இதனை சரிசெய்ய வேண்டும்’ எனவும் அனைவரது முன்னிலையிலும் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அஜித்தின் இந்த பேச்சுக்கு அப்போது அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். இதையெல்லாம் குறிப்பிட்டு, ‘என்ன பழசெல்லாம் மறந்து போச்சா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.