தமிழ் சினிமாவில் நட்சத்திர திருமண தம்பதிகளாக பலம் வரும் அஜித் ஷாலினி இன்று தங்களது 23வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். 


பொதுவாக எல்லா காதலும் வெற்றி பெற்றதில்லை. வெற்றி பெறும் எல்லா காதல்களும் வாழ்க்கையின் கடைசி வரை நிலையாக இருக்குமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். அப்படியான நிலையில் நம்மை சுற்றி காதல் செய்பவர்களையும்,  திரையுலகில் காதலித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்பவர்களை நாம் அதிகம் பார்த்து ரசிப்போம். அந்த வகையில் கோலிவுட்டின் சிறந்த ஸ்டார் தம்பதியினர் அஜித் - ஷாலினி இன்று தனது திருமண நாளை கொண்டாடுகின்றனர். 


அஜித்துக்கு முன்பே அறிமுகம்


 சிவாஜி, ரஜினி, அர்ஜூன் என அந்த காலக்கட்டத்தில் பலரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி யாராலும் மறக்க முடியாது. அஜித்துக்கு முன்பே  குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரீ கொடுத்து 55 படங்களில் நடித்தார்  “பேபி” ஷாலினி. அதேசமயம் அஜித் 1993 ஆம் ஆண்டு தமிழில் அமராவதி படத்திலும், தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்திலும் நடிகராக அறிமுகமனார். 


ஆனால்  1997 ஆம் ஆண்டு அனியாத்தி ப்ரவு என்ற மலையாளப்படத்தில் தான் ஷாலினி ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். இதுவே தமிழில் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதையாக ரீமேக் செய்யப்பட்டது. இதன் மூலம்  தமிழ் சினிமாவில் நடிகையாக ஷாலின் எண்ட்ரீ கொடுத்தார். முதல் படமே அவருக்கு பேமிலி ஆடியன்ஸை பெற்றுக் கொடுத்தது. 


அஜித் - ஷாலினி காதல் 


இப்படியான நிலையில் தமிழில் இரண்டாவது படமாக ஷாலினிக்கு அஜித் நடித்த அமர்க்களம் படம் அமைந்தது. இப்படமே அஜித் - ஷாலினி காதலுக்கு தொடக்கமாகவும் அமைந்தது. குறிப்பாக அமர்க்களம் படத்தில் இடம் பெற்ற பாடலை ஷாலினி பாடியிருந்தார். அதனை திரும்ப திரும்ப கேட்டும், படப்பிடிப்பில் ஷாலினிக்கு அடிபட்டப்போது அஜித் கவலைப்பட்டும் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். 


தமிழில் ஹீரோயினாக ஷாலினி 5 படங்களில் நடித்துள்ள ஷாலினி, நடிகர் அஜித்தை 2000 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு தான் அனோஷ்கா என்ற மகள் பிறந்தார். தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற மகன் பிறந்தார்.  இப்படியான நிலையில் வெளியே பெரிய அளவில் தலைக்காட்டாமல் இருந்து வந்த ஷாலினி, சமீப காலமாக சமூக வலைத்தளங்கலில் செம ஆக்டிவாக இருக்கிறார். தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். 


இந்நிலையில் 23வது திருமண நாளை கொண்டாடும் அஜித் - ஷாலினி தம்பதியினருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.