குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்துஅ அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருக்கிறார். அஜித்தின் 64 ஆவது படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு அஜித் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டதாகவும் இதனால் அடுத்தடுத்து இரு தயாரிப்பு நிறுவனங்கள் பின்வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 

Continues below advertisement

AK 64

அஜித் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான AK64 படத்தையும்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. கடந்த 6 மாதங்கள் ஐரோப்பிய கார் ரேஸிங் போட்டியில் பிஸியாக இருந்த அஜித் தற்போது மீண்டு இந்தியா திரும்பியுள்ளார். அவரது அடுத்த படத்திற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன. ஆனால் தற்போது வரை படத்திற்கான தயாரிப்பாளர் முடிவு செய்யப்படாமல் இருந்து வருகிறது

சம்பளத்தை உயர்த்திய அஜித் 

குட் பேட் அக்லி படம் ஓரளவிற்கு நல்ல வசூல் பெற்றது . இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கார் பந்தையத்தில் உலகளவில் பிரபலமானார். அஜித்தை நாயகனாக வைத்து ஹாலிவுட் தரத்தில் எஃப் 1 மாதிரியான படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க அஜித்தும் தனது விருப்பத்தை பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜயும் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். இந்த சூழ் நிலை எல்லாம் சேர்ந்து அஜித்தின் மார்கெட் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அஜித் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளார் 

Continues below advertisement

AK64 படத்தை முன்னதாக ரோமியோ பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருந்தது. பின் இந்த படம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கைமாறியது. இப்படத்திற்காக அஜித் ரூ 185 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாகவும் ஆனால் தயாரிப்பு நிறுவனம் 80 முதல் 90 கோடி மட்டுமே சம்பளமாக தர தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜித் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளகியுள்ளார். ஆனால் அதே நேரம் ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அஜித் கேட்ட சம்பளத்தை தர திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படியான நிலையில் AK64 கதை மற்றொரு தயாரிப்பாளருக்கு கைமாற வாய்ப்புள்ளது. அடுத்தடுத்து இரு தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க பின்வாங்கியதால் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளே தொடங்க முடியாமல் திணறி வருகிறது படக்குழு.