நடிகர் அஜித் தனது ரசிகர்களிடம் எப்போதுமே சொல்லும் அறிவுரை நேரத்தை முறையாக பயன்படுத்துங்கள் என்பது. இதை அவர் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அப்படி அவர் முன்னதாக சன் டிவிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், “ ரசிகர்களா இருங்க. ஆனால் ரசிகர்களாக மட்டுமே இருக்காதீங்க. படிக்கிறவங்க நல்லா படிக்கணும். வேலைக்கு போறவங்க இன்னும் கடுமையா உழைக்கணும். நேரத்தை தயவு செய்து வீணாக்காதீர்கள். நேரம் போனால் திரும்ப கிடைக்காது. அதனால் அதனை முறையாக பயன்படுத்துங்கள்” என்று சொல்லிருப்பார். அதே போல இன்னொரு பேட்டியிலும் இதை அறிவுரையை வலியுறுத்திருப்பார்.
இந்த நிலையில் கே.ஜி.எஃப் பட ப்ரோமோஷனுக்கான நேர்காணல் ஒன்றில் அஜித் மேற்சொன்ன அதே அறிவுரையை யஷ் சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசும்போது, “ என்னுடைய ஃபேன்ஸ்க்கு எப்போதுமே நான் சொல்லுவேன். உங்களது வேலையை பாருங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கனிவோடு எதிர்கொள்ளுங்கள்.
அதை வென்று உங்களது வாழ்கையில் நீங்கள் வெற்றியாளராக இருங்கள். நீங்கள் என்னுடைய ரசிகராக இருந்தால் பட ரிலீஸ் அன்று அதனை நீங்கள் கொண்டாடலாம். ஆனால் நீங்கள் உங்களுடையை வாழ்கையில் தோற்று விட்டு, என்னுடைய வெற்றியை கொண்டாடாதீர்கள். அது எனக்கு சந்தோஷத்தை தராது. நீங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டும். பட வெளியான அன்று அந்த நாளை கொண்டாடலாம். எனக்கு அதுபோதும்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.