கேரளா என்றுமே தளபதி விஜய் உடைய கோட்டையாக தான் இருந்திருக்கிறது. இதுவரை விஜய் அனைத்துமே கேரளாவில் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்து வந்துள்ளனர். குறிப்பாக போக்கிரி, மாஸ்டர், பீஸ்ட், கோட் விஜயின் ஆக்‌ஷன் மாஸ் என்டர்டைன்மெண்ட் படங்கள் கேரளாவில் முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்துள்ளன. ஆனால் இந்த முறை விஜய் படத்தின் சாதனைகளை எல்லாம் அஜித் உடைய குட் பேட் அக்லி திரைப்படம் ஓரங்கட்டக்கூடும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. 


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானதை அடுத்து, அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. டீசரில் பல கெட்டப்புகளில் தோன்றி அஜித் அசத்தியிருந்தார். இதனால் டீசர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. 



விட்டுக்கொடுத்த விஜய்... தட்டித்தூக்கப் போகும் அஜித்.! தரமான சம்பவத்திற்கு காத்திருக்கும் கேரளா!


வரும் ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது. 2000 திரைகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே குட் பேட் அக்லி படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கேரளாவில் படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் போட்டா போட்டி போட்டு வருகிறார்களாம். கேரளாவில் கடைசியாக விஜய் உடைய பீஸ்ட் திரைப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் பீஸ்ட் திரைப்படம் தான் ரெக்கார்டு பிரேக் செய்துள்ளது. தமிழக திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளே 38 கோடிய 25 லட்சம் வசூலித்து சாதனை படைத்தது. அதை பிரேக் செய்யக்கூடிய ஒரு படமாக குட் பேட் அக்லி இருக்கும் என விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கணித்துள்ளனர். 




குறிப்பாக கேரளாவில் முதல் நாளே இந்த திரைப்படம் கோடிகளில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிக விலை கொடுத்தும் அஜித் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்களாம். இந்த படத்தை தீபாவளி, பொங்கல் ரிலீஸ் போல கொண்டாட கேரள அஜித் ரசிகர்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் விமர்சன ரீதியாக சற்றே சறுக்கலை சந்தித்தாலும், வசூல் ரீதியாக நன்றாகவே அமைந்தது. இதனால் அஜித் படத்தின் மீது கேரள விநியோகஸ்தர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.