நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ (Gladiators) ஆவணப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதிபடுத்தியுள்ளார்.

Continues below advertisement

பொங்கலுக்கு வெளியாகும் கிளாடியேட்டர்ஸ் 

அஜித்தின் கார் பந்தய அனுபவங்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர் பங்கேற்ற தருணங்களை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தை, ஷாலினி அஜித்குமார் கோல்டன் டிராபி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

முதலில் நவம்பர் 19 அல்லது 20-ம் தேதி ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தனது பிறந்தநாளுக்காகப் படத்தை வெளியிட வேண்டாம் என்று ஷாலினி தெரிவித்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், ஏதேனும் ஒரு பண்டிகைக் காலத்தில் படத்தை வெளியிடலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, தற்போது 2027 பொங்கல் வெளியீட்டை நோக்கிப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Continues below advertisement

டேர்டெவில் படப்பிடிப்பு எப்போது?

இதற்கிடையே, அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர்டெவில்’  படத்தில் நடிக்கிறார். ஷாலினி அஜித்குமார், பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, பிரபு, சுனில், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2027 பொங்கள் ரிலீஸ் 

2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’, கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’, கதிர் நடிக்கும் ‘மஞ்சனத்தி’ ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படமும் முதலில் பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய தகவலின்படி இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது எனக் கூறப்படுகிறது.