நடிகர் அஜித்தின் அடுத்த படமானடேர்டெவில்குறித்த அறிவிப்பு வெளியானது முதலே படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ‘குட் பேட் அக்லிபடத்தின் மூலம் அஜித்துடன் இணைந்து வெற்றி பெற்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அவரை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

Continues below advertisement

18 ஆண்டுகளுக்குப் பின் ப்ரோமோஷனின் களமிறங்கும் அஜித் 

இதனிடையே, ‘டேர்டெவில்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, படத்தின் தயாரிப்பு பொறுப்பு ஷாலினி அஜித் குமாரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடைபெறுவதால், அஜித் இந்த முறை தனது படத்தை ப்ரோமோஷ் செய்ய தானே களத்தில் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தைப் பொறுத்தவரை, திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது பல ஆண்டுகளாக அவரது நடைமுறையாக இருந்து வருகிறது. அஜித் கடைசியாக நேரடியாக ஒரு படத்தை புரமோட் செய்தது 2007-ம் ஆண்டு வெளியான ‘Billa’ படத்திற்காகத்தான். அதன்பிறகு தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் உள்ளிட்டவற்றில் அவர் பெரும்பாலும் பங்கேற்கவில்லை

Continues below advertisement

2025-ல் வெளியானகுட் பேட் அக்லிபடத்திற்கும் அஜித் எந்தவொரு வழக்கமான புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏப்ரல் 13 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற வெற்றி விழாவிலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற நிலையில், அஜித் அங்கு இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ‘டேர்டெவில்படத்திற்காக மட்டும் அஜித் தனது கொள்கையை மாற்றிக் கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனை அஜித் தனது மனைவி ஷாலினிக்காகவே செய்வதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

2007-ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் மீண்டும் ஒரு திரைப்படத்தை நேரடியாக புரமோட் செய்ய வந்தால், அது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும்.