அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் தற்போது படத்தில் இடம்பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் குமார் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டேர்டெவில் வெளியிடப்பட்டது. அஜித்தின் மனைவி ஷாலினி இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக் களமிறங்க இருக்கிறார். 

டேர்டெவில் படத்தில் மோகன்லால் ?

டேர்டெவில் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக, அஜித்துடன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. படத்தில் அஜித்தின் நண்பராக மோகன்லால் நடிக்க ஆரம்பத்தில் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு முன்னணி நடிகர்களும் ஒரே படத்தில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

Continues below advertisement

ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மோகன்லால் இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது சம்பளம் மற்றும் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ஆகியவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித்துடன் மோகன்லால் இணைந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

செப்டம்பர் படப்பிடிப்பு

இதற்கிடையே, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராகுல் இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு பணிகளில் இருந்து வரும் ராகுல், இந்த படத்தின் மூலம் நடிகராகவும் கவனம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அடுத்தகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது. அஜித்தின் அடுத்த படமாக உருவாகும் இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் படக்குழு குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.