தமிழ் திரையுலகமே தல என கொண்டாடும் நடிகர் அஜித் குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் பலரும் அறியாத நடிகர் அஜித் பற்றின சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
* பாலக்காடு ஐயருக்கும் சிந்தி அம்மாவுக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர் நடிகர் அஜித். இவருக்கு அனூப் மற்றும் அனில் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சினிமாவுக்கு எந்த வகையில் சம்பந்தமில்லாத இரு குடும்பத்தில் இருந்து பின்புலம் ஏதும் இன்றி சினிமாவில் அடியெடுத்து வைத்தவர்.
* பிறந்தது செகந்திராபாத் என்றாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் தான் பயின்றார். படிப்பின் மீது பெரிய ஈடுபாடு இல்லாத அஜித் பெற்றோரின் பேச்சை கேட்காமல் பாதியிலேயே பள்ளி படிப்பை கைவிட்டார்.
* ஆரம்பகாலகட்டத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்த அஜித் ஒரு பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அப்போதிலிருந்தே பைக் ரைடிங் மீது அலாதியான ஆசை. முதல் முறையாக ஒரு ரேஸில் கலந்து கொண்டு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதிலும் பைக் மீது இருந்த ஆர்வம் சிறிதளவும் குறையவே இல்லை.
* சிறிது காலம் மெடிக்கல் ரெப்பாகவும், துணிக்கடையில் சேல்ஸ் மேனாகவும் பணியாற்றியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையை நிரூபித்து மேனேஜராக பதவி உயர்வு பெற்றார்.
* விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது தான் மியாமி குஷன் செருப்பு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது தான் அவர் திரையில் முகம் காட்டிய முதல் அனுபவம்.
* சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி வந்த சமயத்தில் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. 'பிரேம புஸ்தகம்' என்ற படத்தின் ஹீரோவாக நடித்து வந்த போது அந்த திரைப்படத்தின் இயக்குநர் விபத்தில் உயிரிழந்தார். அதனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதுவே அஜித் தெலுங்கு சினிமாவில் நடித்த முதலும் கடைசியுமான படமாக அமைந்தது.
* 1990ம் ஆண்டு தமிழில் வெளியான 'என் வீடு என் கணவர்' படத்தில் பள்ளி மாணவனாக சிறு கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் அமராவதி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகு மீண்டும் கடும் விபத்தில் சிக்கிய அஜித்துக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் அந்த படத்தில் அவருக்கு டப்பிங் பேசியது நடிகர் விக்ரம்.
* அஜித் தோற்றத்தை பார்த்து அவருக்கு பல பாலிவுட் வாய்ப்புகள் வந்த போதும் தமிழ் படம் மட்டுமே போதும் என வந்த வாய்ப்பை எல்லாம் நிராகரித்துவிட்டார்.
*அஜித் பைக் பிரியர் மட்டுமல்ல அவருக்கு கார், விமானம், கப்பல் கூட ஓட்ட தெரியும் என கூறப்படுகிறது. விமானம் ஓட்ட பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டுமே.
* அஜித்துக்கு இதுவரையில் 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற போதிலும் இன்றும் அவர் நடிக்கும் படங்களில் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.
* அஜித்துக்கு நகைகள் அணிந்து கொள்வது சுத்தமாக பிடிக்காதாம். அவர் அணிதிருப்பது ஒரே ஒரு மோதிரம் தான் அதுவும் அவரின் மனைவி ஷாலினி பரிசளித்த மோதிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
* தன்னுடைய வீட்டில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அவரே தனது சொந்த செலவில் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.
*சென்னை ரைஃபில்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார்.
* காபி, டீ என எது குடித்தாலும் இடது கையால் குடிக்கும் பழக்கமுடையவர்.
* 2018ம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற ‘மிஷன் துரோணா’ ஏரோமாடலிங் திட்டத்தின் தலைமை ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் பொறியியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.