காதலர் தினத்துக்காக காதல் பாடல் ஒன்றை படமாக்க திட்டமிட்டுள்ளார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். இது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன


சில நாட்களாக விவாகரத்து பரபரப்பில் சிக்கிக் கொண்டிருந்த ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மீண்டும் பணி தொடர்பான செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளார். நடிகரின் ரஜினியின் மூத்த மகளான ஐஷ்வர்யா இயக்குநராவார். நடிகர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தையும், நடிகர் கார்த்திக்கின் மகனை வைத்து வை ராஜா வை திரைப்படத்தையும் இயக்கினார். நடனம், பாடல் என திரைத்துறையில் பல்வேறு முகங்களாக இருப்பவர். தற்போது உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டி வரும் ஐஷ்வர்யா மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். 






வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காதல் பாடல் ஒன்றை படமாக்க ஐஷ்வர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காதல் ததும்பும் அழகான ஒரு பாடலை ஹைதராபாத்தில் படமாக்க உள்ளாராம் ஐஷ்வர்யா. வரும் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை படப்பிடிப்பு இருக்கும் என்றும், பின்னர் எடிட்டிங் வேலைகள் முடிந்து சரியாக பிப்ரவரி 14ம் தேதி பாடல் வெளியாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 3நாட்கள் தொடர்ந்து இப்பாடல் ஷூட்டிங் இருக்குமென தெரிகிறது. விவகாரத்து அறிவிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய வேலையில் தீவிரமாக களமிறங்க ஐஷ்வர்யா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முன்னெடுப்பே இந்த பாடல் ஷூட்டிங் எனவும் கூறுகிறது கோலிவுட்.


தனுஷ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த 2000-களில் அவருக்கு பக்கபலமாக அவரது இருந்தவர் ஐஸ்வர்யா. இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமிக்கிறார் ஐஸ்வர்யா.






 


இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2013-இல் JFW-க்கு ஐஷ்வர்யா அளித்த பேட்டியில், ஐஸ்வர்யா தங்கள் உறவைப் பற்றி மனம் திறந்தார். தனுஷும் தானும் ஒன்று சேர்வது ‘கடவுளின் விருப்பம்’ என்றார்.  இந்நிலையில் நடிகர் தனுஷும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஷ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டு விவாகரத்தை சமீபத்தில் அறிவித்தனர்.