திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வந்த லால் சலாம் திரைப்படம் முடிவடைந்த நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் லால் சலாம் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லால் சலாம் படப்பிடிப்பு துவங்கதற்கு முன்பு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு படப்பிடிப்பை துவங்கினார். மேலும் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணு விஷாலின் படப்பிடிப்பு காட்சிகள் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. 


 




 


நடிகர் ரஜினிகாந்த் அருணாச்சலேஸ்வரர் கோயில் சாமி தரிசனம் 


அதனைத் தொடர்ந்து ராம் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் மற்றும் திருவண்ணாமலையிலும் எடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது படப்பிடிப்புக்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலையிலேயே மூன்று நாள் தங்கினார். மேலும் திருவண்ணாமலை வேலூர் செல்லும் சாலையில் லால் சலாம் படப்பிடிப்புகள் நடைபெற்றது. அப்பொழுது ரஜினியை காண திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரஜினி ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் ரஜினி காரில் ஏறி தங்களுடைய ரசிகர்களுக்கு கையசைத்தவாறு புறப்பட்டு சென்றார். கடவுள் சிவனுடைய தீவிர பக்தரான ரஜினி படப்பிடிப்பு முடிந்தவுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார்.


 


 




 


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் 


நடிகர் ரஜினி சாமி தரிசனம் செய்வதை அறிந்த ரசிகர்கள் ரஜினியை காண்பதற்காக அருணாச்சலேஸ்வரர் கோவில் குவிந்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு லால் சலாம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு அடைந்தது . அதனையடுத்து திருவண்ணாமலையில் தங்கி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வப்போது அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்வது வழக்கமாக தொடர்ந்துள்ளார். மேலும் லால் சலாம் திரைப்படம் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், முருகர் அண்ணாமலையார் உடனாகி உண்ணாமலையாமனை சாமி தரிசனம் செய்து பின்னர்  வெளியே சென்றார். அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் பக்தர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.