Aishwarya Rai : அந்தரங்க கேள்விக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பளிச் பதில்...எத்தனை தெளிவு  


உதாரணத்திற்கு கூட ஒரு பெண்ணை வருணிப்பதற்காகவோ அல்லது கிண்டலாகவோ பொதுவாக கூறப்படும் வார்த்தை "இவ பெரிய ஐஸ்வர்யா ராய்ன்னு நெனப்பு"  என்று தான். அப்படி அழகென்றால் அது ஐஸ்வர்யா ராய் தான் எனும் அளவிற்கு அவர் ஒரு பேரழகி. "உலக அழகி" எனும் பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமான ஒன்று தான். "இருவர்" திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர். தனது சிறப்பான நடிப்பால் அனைத்து வயதினரையும் ஈர்த்தவர். 


அதிக சம்பளம் பெரும் ஹீரோயின்:


இருவர் திரைப்படத்தை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன் போன்ற பல திரைப்படங்களில் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. அவர் நடித்த ஜீன்ஸ் திரைப்படத்தில் வரும் "அதிசயம்" பாடல் ஐஸ்வர்யா ராய்காகவே எழுதப்பட்டது எனலாம். பின்னர் பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் அங்கு ஒரு முன்னணி ஹீரோயினாக ஆனார். இந்திய சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாக வளர்ந்தார். 


 



திருமண வாழ்கை:


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை 2007ம் ஆண்டு கைப்பிடித்த ஐஸ்வர்யா ராய். அவர்களின் திருமண வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவர்கள் இருவருக்கும் ஆராத்யா பச்சன் எனும் 10 வயது மகள் இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் 5 வயது வித்தியாசம். அபிஷேக் பச்சனை விடவும் ஐஸ்வர்யா ராய் 5 வயது மூத்தவர் என்றாலும் அவர்கள் இருவர் இடையிலும் உள்ள அன்பு உன்னதமானது. 


பொன்னின் செல்வன் கதாபாத்திரம்: 


இயக்குனர் மணிரத்னம் இயக்கும் கனவு படமான பொன்னின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் அவர் பெரிய பழுவேட்டரையாராக சரத்குமார் நடித்துள்ளார். அவரின் மனைவி நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். பெரும் எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் உருவாக்கப்படும் இப்படம் செப்டம்பர் 30 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


புதிய தகவல்:


பொன்னின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும்  நிலையில் ஒரு புதிய தகவலை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர் தற்போது கர்பமாக இருப்பதாகவும் அதனால் அவரது நடிப்பை சற்று ஒத்திவைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் கர்ப்பகால உடற்பயிற்சியில் முக்கியமாக கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தெளிவான பதில்:


சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். தாம்பத்யம் குறித்து கேட்ட போது மிகவும் தெளிவாக ஒரு பதிலை பளிச் என்று கூறியுள்ளார். "தாம்பத்யம் என்பது கணவன் மனைவிக்குள் இருவரும் உள்ளத்தாலும் உணர்ச்சியாலும் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் நிம்மதியையும் இன்பத்தையும் தரும். இருவரும் கடமைக்காக இல்லாமல் மனதார உறவில் ஈடுபடவேண்டும். நானும் என் கணவரும் மனதார நிம்மதியாக இருக்கிறோம். என்னால் அவரும் அவரால் நானும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களின் தாம்பத்யம் இது தான்" என மிகவும் ஒரு தெளிவான பதிலை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.